}
உங்களை கொண்டு ஒருவர் நேர் வழி அடைவாராயின்,
அது இந்த உலகம் உலக வஸ்துக்களை விட மேலானது.

வாழ்வின் லட்சியம் இன்பம் மட்டும் அல்ல
நம்மையும் பிறரையும் நல்லோராக்குவதே.

October 10, 2010

பிறரை பாதிப்புக்குள்ளாக்கி சிரிக்க வைக்கக்கூடாது.

                                                 
மற்றவர்களை பயமுறுத்தியோ ஏமாற்றியோ கேலி செய்தோ நமது நகைச்சுவைகள் இருக்கக்கூடாது என்று மார்க்கம் நமக்கு பணிக்கிறது. 
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் உறங்கிவிட்டார். வேறு சில தோழர்கள் (உறங்கிக்கொண்டிருந்தவருடன்) இருந்த அம்புகளை அருகில் சென்று அதை எடுத்துவைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) தோழர்  கூட்டம் சிரித்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் இவரது அம்புக்களை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார் என்று கூறினார்கள். ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா ஆதாரம் நூல் : அஹ்மத் (21986)

Thanks; Abdul Rasheed

October 09, 2010

உம்மி நபியை மாமேதையாக்கியது எது?


முதலில் உம்மி என்பதன் பொருள் என்ன என்பதைப் பார்ப்போம். உம்மி என்றால் தாய் என்பது பொருள். அதாவது தாயை சார்ந்திருப்பவர். கைக்குழந்தைகளே தாயை சார்ந்திருப்பார்கள். எனவே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதுகின்ற, படிக்கின்ற விஷயங்களில் தாயை சார்ந்திருப்பவராக அதாவது உம்மி நபியாக இருந்தார்கள்.


முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உம்மி நபியாக இருந்தது அவர்களுக்கு ஒருபோதும் மதிப்பு குறைவை ஏற்படுத்தவில்லை. மாறாக அவர்களுக்கு மேண்மையையே ஏற்படுத்தியது. 

அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்குர்ஆன் உயர்ந்த இலக்கியத் தரமுடையது. இதுபோன்ற ஒன்றை யாராலும் இயற்ற முடியாது என்று அல்குர்ஆனிலே அல்லாஹ் சவால் விடுகின்றான

நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்); நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!

உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! (கெட்ட) மனிதர்களும், கற்களுமே அதன் எரி பொருட்கள். (ஏக இறைவனை) மறுப்போருக்காகவே இது தயாரிக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:23,24)

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்திருந்தால் அல்லாஹ் அருளிய குர்ஆனை மக்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்களே இட்டுக்கட்டி உள்ளார் என நினைப்பர்கள். அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என அறிந்திருந்தும் அக்கால மக்கள் நபியவர்கள் மீது குர்ஆனை அவரே இட்டுக் கட்டியுள்ளார் என வீணாகக் கதையளந்தனர். 

“இதனை இவர் இட்டுக் கட்டி விட்டார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று (முஹம்மதே!) கூறுவீராக! (அல்குர்ஆன் 10:38)

அதுமட்டும்  அல்ல, முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எழுத, படிக்க தெரியாது என்பதை அந்த மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருந்த காரணத்தினால் நபியவர்கள் வேறொருவரின் துணையுடன் அல்குர்ஆனை எழுதினார்கள் எனக் கூறத் தொடங்கினர். 

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்பதை அல்குர்ஆன் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றது. அவற்றுள் சில,

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர்………(அல்குர்ஆன் 7:157)

(முஹம்மதே!) இதற்கு முன் எந்த வேதத்திலிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. இனியும் உமது வலது கையால் எழுதவும் மாட்டீர்! அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 29:48)

எழுதப் படிக்கத் தெரியாது என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அந்தஸ்தை அதிகரிக்கும் காரணியாகவே அமைந்திருக்கின்றது. அவர்கள் உம்மி நபியாக இருந்து அத்தனை சாதனைகளையும் நிறைவேற்றியது என்பது சாதாரண விஷயமல்ல. அல்லாஹ்வின் வசனங்களே இவ்வனைத்திற்கும் காரணமாக அமைந்துள்ளன. 

அல்குர்ஆன் எனும் கடலில் ஒருவன் மூழ்குவானேயானால் முத்தை விடவும் விலைமதிப்பற்றவைகளை தமது வாழ்வில் பெற்றுக் கொள்வான். அல்குர்ஆனைப் படிக்கப் படிக்க மனிதன் வாழ்வின் எதார்த்த நிலையை உணர்வான். புனித வேதம் அல்குர்ஆன் உலகிலுள்ள எந்த புத்தகத்திற்கும் ஒப்பாகாது. அதன் உரை நடையும் ஏனையவற்றிலிருந்து வித்தியாசப்படும். அதைப் மீண்டும் படிக்கப் படிக்க ஒருபோதும் சலிப்பு எற்படுவதில்லை. 

அல்குர்ஆன் காட்டித் தந்த வழியைக் கடைப்பிடிப்போமேயானால்..ஈருலக வாழ்விலும் எண்னற்ற பயன்களை இறைவன் அருளால் அடைந்து விட முடியும். 

அல்குர்ஆன் மக்களை சிந்திக்கத் தூண்டுகிறது பல ஆராய்ச்சிகளுக்கு வழி வகுக்கின்றது. நல்வழிப்படுத்துகின்றது நன்மை தீமைகளை பிரித்தறிவிக்கின்றது. ஒட்டு மொத்தமாக மனிதனின் சீரான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றது.

இப்படிப் பட்ட திருமறையை தினமும் படித்து நல்வழியை அடைவோமாக.

thanks ; Tntj

About Me

My photo
T.keeranur, Tamilnadu,, India
back to top