}
உங்களை கொண்டு ஒருவர் நேர் வழி அடைவாராயின்,
அது இந்த உலகம் உலக வஸ்துக்களை விட மேலானது.

வாழ்வின் லட்சியம் இன்பம் மட்டும் அல்ல
நம்மையும் பிறரையும் நல்லோராக்குவதே.

March 30, 2011

ஒன்பது கட்டளைகள்

                                                             

1.மறைவிலும் ,வெளிப்படையிலும் இறைவனை அஞ்ச வேண்டும்.

2.கோபத்திலும்,அமைதியிலும் நீதியாக நடக்க வேண்டும்.

3.வறுமையிலும்,வளமையிலும் நடுநிலை பேண வேண்டும்.

4. நம்முடன் உறவுகளை முறிப்பவர்களுடன், நாம் உறவை பேண வேண்டும்.

5.நம்மிடமிருந்து பறிப்பவர்களுக்கு நாம் வழங்க வேண்டும்.

6.நமக்கு அநீதி இழைப்பவர்களை நாம் மன்னிக்க வேண்டும்

7.நம் மவுனம் தியானமாக ஆகி விட வேண்டும்

8.நம் வாய்மொழிகள் யாவும் இறைவனை நினைவு கூர்வதாய் இருக்க வேண்டும்.

9.நம் பார்வை கூர்மை உள்ளதாய் இருக்க வேண்டும்.

ஆதார நூல் ;  முஸ்லிம்










March 18, 2011

வெளி நாடுகளில் வசிக்கிற அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியவை.



திரு குர் ஆன் திலாவத்.


(N R I) மக்களே, இறப்புக்கும் திட்டமிடுங்கள்! இது மனதிற்கு கஷ்டம் தருகின்ற விஷயம் என்றாலும் அயல்நாடுகளில் வசிக்கிற அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய ஒன்று.


மனிதர்களாகிய நாம் எல்லாவற்றிற்கும் திட்டமிடுகிறோம், ஆனால், வெளிநாட்டில் வசிக்கிற யாராவது, இறப்பைப்பற்றி எண்ணியாவது பார்த்திருப்போமா? பதில் இல்லை என்பதுதான்


சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில், துபாய் பத்திரிகையான கல்ஃப் நியூஸ் முகத்திலறைகிறமாதிரி சொன்னது செய்தி கட்டிங்கை என் நண்பர் அனுப்பிவைத்தார் அந்த. பத்திரிகையில் வந்திருந்த கட்டுரைகளை வாசித்த வெளிநாட்டு மக்களின் மனதில் மிகப்பெரும் அதிர்ச்சி உண்டாகியிருக்கும் என்பதில் ஐயமேஇல்லை.

அந்த தினசரியில் வந்த கட்டுரை சொன்னது என்னவென்றால் ( U.A.E) துபாய் போன்ற நாடுகளில் இறப்பின் விலை மதிப்பு .மிக மிக அதிகம், அதற்காக அயல்நாட்டினர் அனைவரும் முன்னேற்பாடு செய்துகொள்வது அவசியம் என்பதே.

அதாவது அயல்நாட்டுக் குடிமகன் ஒருவர் துபாயில் மரணமடைந்தால், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும், எந்த அளவு பண செலவுகள் வரும், என்னென்ன வேலையெல்லாம் செய்யவேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தார்கள் . அதை படிக்கும்போது மனதில் ஒரு இனம் புரியாத ஒரு இருக்கமான உணர்வு தோன்றியது என்பது மறுக்கமுடியாத உண்மை.


கடந்த ஆண்டு பணியிலிருக்கும்போது இறந்த,வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 800 என்றும் அதிலும் இதய சம்பந்தப்பட்ட நோய்களால் இறப்பவர்களில் அதிகம்பேர் இந்தியர்கள்தான் என்றும் கூறுகிறார்கள்.


வேலையில் இருக்கும் குடும்ப தலைவர் ஒருவர் இங்கே இறக்க நேரிட்டால், துபாயில் அவருக்கு இருக்கிற கடன்கள், வீட்டுவாடகை, ட்ராஃபிக் மற்றும் பார்க்கிங் ஃபைன் உட்பட எந்த பாக்கியுமில்லாமல் கொடுத்த பின்னர்தான் இறந்தவரின் உடலை எடுத்து போக அனுமத்திப்பார்கள் என்பது, கேட்கும் போது கஷ்டமாக இருந்தாலும், வேறு வழியில்லை என்பது மனதை சுடும் நிஜம்தான். அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டுப் பணியாளர் ஒருவர் இறந்தவுடன், உடனடியாக அவருடைய வங்கிக்கணக்கு மற்றும் கூட்டுக்கணக்குகள் (joint account)ஏதுமிருந்தால், அனைத்தும் முடக்கப்படும் மற்றும். இன்ஸ்யூரன்ஸ் செய்திருந்தாலும் அந்தப்பணம் கிடைக்கவும் தாமதமாகும்.


இழப்பின் துயரத்துக்கு மத்தியில் ,இறந்தவருக்கான அரசுச் சான்றிதழ்களுக்காகவும், மற்றும் உடலைப் பதப்படுத்துதல், விமானம் மூலமாகக் கொண்டுசெல்லும் செலவு என்று அதற்காக இன்னும் ஒரு பெருந்தொகையும் உழைப்பும் தேவைப்படும் அந்தக் குடும்பங்களுக்கு.


ஏர் இந்தியா, இந்தியர்களுக்காக, இலவசமாக உடலை ஊருக்குக்கொண்டுசேர்க்கும் பணியைச் செய்கிறதாம். மற்ற விமான நிறுவனங்கள் 50% சலுகைவிலையில் இந்தச் சேவையைச் செய்கிறார்களாம். ஆனால், உடல் எடைக்கு ஏற்றவாறு கட்டணம் கூடுமாம். அதிக உடல்எடையென்றால் இங்கேகூடக் கஷ்டம்தான் ( மக்கா அளவோடு சாப்பிட்டு உடம்பை ஸ்லிம்மாக வைத்து கொள்ளுங்கள்)

வாழுகிறவரை, மற்றவர் வாழ வசதிசெய்துகொடுத்த ஒருவன், இறப்புக்குப்பின் பயணிக்கையில், சரக்குகளோடு சரக்காகிப்போவது கொடுமையிலும் கொடுமை. அதிலும், மொத்த சரக்குக் கட்டணம் 1500 திர்ஹாம்களாம்!

எந்த வெளிநாட்டில் வாழுகிற ஒருவர், இதுவரை எதற்காக எவ்வளவு பணம் மற்றும் சொத்துக்களை சேர்த்துவைத்திருந்தாலும், இதை படித்த பிறகாவது இக்கட்டான சூழ்நிலைகளில் உதவுவதற்கென்று முன்னேற்பாடாகப் பணம் சேர்த்துவைக்க வேண்டும் ஆனால், அது மற்றவர்களின் பெயரில் இருப்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால் பின்னர் கஷ்டப்பட்டு நடுத்தெருவில் நிற்பது அவரது குடும்பம்தான்.



இதுதொடர்பான கருத்துக்களை கல்ஃப் நியூஸில் படிக்க இங்கே க்ளிக் செய்து பாருங்க...

இறப்பு செலவு பட விளக்கத்திற்கு இங்கே க்ளிக் செய்யவும்.


நீங்கள் படித்தவற்றை முடிந்தவரைக்கும் பிறர் அறிய எடுத்துச்சொல்லவேண்டியது மிக அவசியம். அதனால் இந்த செய்தி உபயோகமாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் உங்கள் நண்பர் மற்றும் உறவினர்களுக்கு எடுத்து சொல்லுங்கள் அல்லது இந்த பதிவிற்க்கான லிங்கை அனுப்பி வையுங்கள் . வாழும் வரை சந்தோஷமாக வாழ கற்றுக்கொண்டு பிறரையும் சந்தோஷமாக வாழவிடுங்கள்.



நன்றி;அவர்கள் உண்மைகள் வலைப்பூவில் இருந்து எடுக்கப்பட்டது

About Me

My photo
T.keeranur, Tamilnadu,, India
back to top