}
உங்களை கொண்டு ஒருவர் நேர் வழி அடைவாராயின்,
அது இந்த உலகம் உலக வஸ்துக்களை விட மேலானது.

வாழ்வின் லட்சியம் இன்பம் மட்டும் அல்ல
நம்மையும் பிறரையும் நல்லோராக்குவதே.

September 13, 2010

14ஆவது துபாய் சர்வதேச குர்ஆன் போட்டி.

துபாய் குர்ஆன் போட்டியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த மேர்பை வெற்றி
 
குர்ஆன் செயற்பாட்டுக் குழு: 14ஆவது துபாய்  சர்வதேச குர்ஆன் போட்டியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த போட்டியாளர் முஹம்மத் இர்சாத் மேர்பை முதலிடம் பெற்று 250,000 திர்ஹம் பணப்பரிசைப் பெற்றுக் கொள்ள, பங்களாதேசைச் சேர்ந்த மஸ்ஊத் ரித்வான் மற்றும் பஹ்ரைனைச் சேர்ந்த மிசாப் ஈஸா ஆகியோர் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ரித்வான் 200,000 திர்ஹம்களையும், ஈஸா 150,000 திர்ஹம்களையும் பெற்றுக் கொண்டனர்.

அஹ்மத் யசூரி (எகிப்து), காலித் அபூபக்கர் (யெமன்), கலீல் தாஹிர் (லிபியா), மப்வானா அஸ்ஸா (தான்சானியா), அம்மா புகிஸ் (சவூதி அரேபியா), நாசிர் சர்ராம் (குவைத்), முஹம்மத் லட்ராச் (மொரோக்கோ) மற்றும் முஹம்மத் ஒஸ்மான் (சூடான்) ஆகியோர் அடுத்தடுத்த பரிசில்களைப் பெற்றுக் கொண்டனர்.

80 மற்றும் 80க்கு மேல் புள்ளிகள் பெற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் 30,000 திர்ஹம்களும், 70 – 79 வரை புள்ளிகள் பெற்றோருக்கு 25,000 திர்ஹம்களும், 70க்குக் குறைவாகப் பெற்றோருக்கு 20,000 திர்ஹம்களும் வழங்கப்பட்டன.

திங்கட்கிழமை இரவு, துபாய் வர்த்தக சதுக்கத்தில் இடம்பெற்ற நிறைவு விழாவில், சூடானின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் ரஹ்மான் ஸ்வார் அல்தஹப் மற்றும் 70 போட்டியாளர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 10 சிறந்த போட்டியாளர்களுக்கு கௌரவமளித்தார். போட்டியாளர்களுக்கு பணப்பரிசுககளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Thanks; iqna

September 06, 2010

திருக்குரான் ஓர் இணயதளம் அறிமுகம்.

இந்த தளத்தை பார்வையிட இங்குகிளிக் செய்யவும். www.tanzil.info
இந்த இனையதளம்  திருக்குரானை கற்று கொள்பவர்களுக்கு
 மிக மிக இந்த தளம் பயனுள்ளது. நீங்கள் கிளிக்
செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் மேல்புறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோதெரியும்.தேவையானமொழியைத்தேர்வு செய்து கொள்ளலாம்
இதில் Search பகுதிக்கு சென்று நமக்கு தேவையானவற்றை 
எழுதுக்களின்மூலம்  தேவையான ஆயத்துகளை தேடிக்
கொள்ளலாம்அரபி டைப் தெரியவில்லை என்றால் 
அருகில் இருக்கும் Roots  மூலமா  அரபி
எழுதுக்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.


Browse பகுதியில் நமக்கு தேவையான சூராக்கள்,ஆயத்துக்கள்,
பக்கங்களை தேடிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி அருகில் காணப்படும்
 (-),(+)மூலமாக  (font ) எழுத்துருக்களை பெரியதாகசிறியதாக அமைத்துக்கொள்ளலாம்,
Recitation பகுதியில் நமக்கு பிடித்தமான ஓதுபவர்களின் பெயர்களைதேர்ந்தெடுக்கொள்ளலாம் அதன் அருகில்காண்ப்படும் பெருக்கல் குறிஎன்பதுஒதுப்படுகின்ற வரிகளை  
ஒருதடவைகேட்க நினைத்தால் பெருக்கல்குறியை 
ஒன்று,இரண்டு அல்லது மூன்று தடவை கேட்க நினைப்பவர்கள்விருப்பதிற்கேற்ப  
அதில் கிளிக் செய்து தேர்வு செய்துகொள்ளலாம்
Translation பகுதியில் சென்று மிழை தேர்வு செய்து 
மேலே காணப்படும்Quran பகுதியில் கிளிக் செய்தால்
ஒதப்படும் ஆயத்துகளின் மேல் Mouse  வைத்தால் 
அதன் விளக்கம் தமிழில் தெரியும்,  மேலே
காணப்படும்Translation பகுதியில் கிளிக் செய்தால்
குரான் முழுவதையும் தமிழில் காணலாம்.
Translation பகுதியில் கீழ் காணப்படும் 
Fixed Translation Box என்பது ஓதுகின்ற 
போது தானாக அதன் விளக்கம் அருகில் தெரியும்
Translation on Mouse Over
என்பது ஓதப்படுகின்ற போது  Mouse   
ஆயத்துகளின்மேலே வைத்தால் தமிழில் விளக்கம் தெரியும்.


Quran என்ற பகுதிக்கு சென்று அரபி எழுத்துகளை
தேர்ந்தெடுத்துக்கொள்ளாலம்





ஆங்கிலத்திலும் நீங்கள் விளக்கங்கள் பெறலாம்.



Display Options  சென்றும் எழுத்துருக்களின்அளவு 
மற்றும் Align  செய்து கொள்ளலாம்முயற்சி 
செய்து பாருங்கள்நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

About Me

My photo
T.keeranur, Tamilnadu,, India
back to top