}
உங்களை கொண்டு ஒருவர் நேர் வழி அடைவாராயின்,
அது இந்த உலகம் உலக வஸ்துக்களை விட மேலானது.

வாழ்வின் லட்சியம் இன்பம் மட்டும் அல்ல
நம்மையும் பிறரையும் நல்லோராக்குவதே.

September 13, 2010

14ஆவது துபாய் சர்வதேச குர்ஆன் போட்டி.

துபாய் குர்ஆன் போட்டியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த மேர்பை வெற்றி
 
குர்ஆன் செயற்பாட்டுக் குழு: 14ஆவது துபாய்  சர்வதேச குர்ஆன் போட்டியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த போட்டியாளர் முஹம்மத் இர்சாத் மேர்பை முதலிடம் பெற்று 250,000 திர்ஹம் பணப்பரிசைப் பெற்றுக் கொள்ள, பங்களாதேசைச் சேர்ந்த மஸ்ஊத் ரித்வான் மற்றும் பஹ்ரைனைச் சேர்ந்த மிசாப் ஈஸா ஆகியோர் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ரித்வான் 200,000 திர்ஹம்களையும், ஈஸா 150,000 திர்ஹம்களையும் பெற்றுக் கொண்டனர்.

அஹ்மத் யசூரி (எகிப்து), காலித் அபூபக்கர் (யெமன்), கலீல் தாஹிர் (லிபியா), மப்வானா அஸ்ஸா (தான்சானியா), அம்மா புகிஸ் (சவூதி அரேபியா), நாசிர் சர்ராம் (குவைத்), முஹம்மத் லட்ராச் (மொரோக்கோ) மற்றும் முஹம்மத் ஒஸ்மான் (சூடான்) ஆகியோர் அடுத்தடுத்த பரிசில்களைப் பெற்றுக் கொண்டனர்.

80 மற்றும் 80க்கு மேல் புள்ளிகள் பெற்ற போட்டியாளர்கள் அனைவருக்கும் 30,000 திர்ஹம்களும், 70 – 79 வரை புள்ளிகள் பெற்றோருக்கு 25,000 திர்ஹம்களும், 70க்குக் குறைவாகப் பெற்றோருக்கு 20,000 திர்ஹம்களும் வழங்கப்பட்டன.

திங்கட்கிழமை இரவு, துபாய் வர்த்தக சதுக்கத்தில் இடம்பெற்ற நிறைவு விழாவில், சூடானின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் ரஹ்மான் ஸ்வார் அல்தஹப் மற்றும் 70 போட்டியாளர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 10 சிறந்த போட்டியாளர்களுக்கு கௌரவமளித்தார். போட்டியாளர்களுக்கு பணப்பரிசுககளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Thanks; iqna

0 comments:

Post a Comment

About Me

My photo
T.keeranur, Tamilnadu,, India
back to top