}
உங்களை கொண்டு ஒருவர் நேர் வழி அடைவாராயின்,
அது இந்த உலகம் உலக வஸ்துக்களை விட மேலானது.

வாழ்வின் லட்சியம் இன்பம் மட்டும் அல்ல
நம்மையும் பிறரையும் நல்லோராக்குவதே.

June 07, 2010

ஜட்கா என்பது என்ன..?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

ஜட்கா (Jhatka) என்ற சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தது இதற்கு கொல்வது என்று பெயர். ஜட்கா என்ற பெயரை வடமாநிலத்தவர்கள் சட்கா (Chatka) என்றும் அழைப்பர்
.
ஜட்கா முறைப்படி எவ்வாறு பலியிடுகிறார்கள்?
ஒரு பலியிடக்கூடிய பிராணியை ஒரு இடத்தில் கட்டி வைத்து விட்டு அந்த பிராணியின் கழுத்தை நோக்கி ஓங்கி ஒரே அடியாக கூர்மையான கத்தி, வால் மற்றும் கோடாரியால் வெட்டுவதுதான் ஜட்கா எனப்படுவதாகும். ஒரு பிராணியை இவ்வாறு வெட்டுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.


மேலும் ஜட்கா முறையில் பிராணியின் மரணம் எவ்வாறு ஏற்படுகிறது? என்பதை கவனிக்கவும்!
பலி பிராணியின் கழுத்தை ஓங்கி வெட்டுவதால் அந்த பிராணியின் தலை முழுவதுமாக வெட்டப்பட்டு கீழே விழுந்து விடுகிறது. இதனால் மூளை செயலிழந்துவிடுகிறது மேலும் மூளைக்கும் உடலுக்கும் உள்ள உறவு துண்டிக்கப்பட்டு அந்த பிராணியின் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்த ஓட்டம் ஸ்தம்பிக்கப்பட்டு ஆங்காங்கே நின்றுவிடுகிறது. இதனால் அந்த பிராணியின் இரத்தில் உள்ள நோய்க்கிருமிகள் வெளியேற வழியின்றி மாமிசத்தில் தங்கிவிடுகிறது. 


ஜட்கா என்ற பழக்கம் பகவத் கீதைக்க எதிரானது
பகவத் கீதையில் உயிர் பலியிடுவதற்கு பல்வேறு தடைகள் இருக்கின்ற அப்படியிருக்க உயிர்பலி கொடுக்க ஜட்கா முறையை அனுமதிப்பது ஏன்?
ஒரு உயிரை துடிக்க துடிக்க கொல்வதும் அதன் கஷ்டத்தை அதிகரிப்பதும் தவறானது .
  • ஜட்கா கொடுப்பதற்கு முன் பலி பிராணியின் Testicles எனப்படும் இந்திரிய விதைகள் அறுக்கப்படுகின்றன அந்த பலி பிராணி துடிக்கிறது இதற்கு இவர்களின் வேத புராணங்களில் ஆதாரம் உள்ளது மற்ற வேத புராணங்களில் உள்ள சமஸ்கிருத சுலோகங்களை படியுங்கள்!
விருஷ்னிக மேஷ சம்பந்தா க்ரஹீ
(Vrishanika mesha sambanda grahee)
முக்தைக மேஷ ஜீவோத சாஹி
(Muktaika meshaha jeevoda sahee)
மேஷம் எனப்படும் ஜட்கா கொடுக்கும் போது உயிருள்ள ஆட்டின் விந்து விதைகளை அறுக்க இந்த சுலோகம் வலியுறுத்து கிறதாம்! 
  • கோழியாக இருந்தால் அதன் தலையை கதவின் துவாரத்தில் இட்டு நசுக்குகிறார்கள்
  • காளியம்மண் பண்டிகைகளின் போதும் சுடுகாட்டு கொல்லி என்ற விழாவின் போதும் ஆடு, கோழி இவைகளை பலி பிராணியாக நேர்ச்சை செய்து உயிரோடு இந்த மிருகங்களை பற்களால் கடித்து கொல்கிறார்கள்!

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் – நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன் 2:168)

அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்;. நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:88)

ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டும், ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது. நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன்5:93)

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;. ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்2:173)

இஸ்லாத்திற்குள் வாருங்கள்! தமிழ்ஹிந்து சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பிதழ் இனிதே விடப்பட்டுள்ளது! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!
அல்ஹம்துலில்லாஹ்

நன்றி. சிராஜ் அப்துல்லாஹ்    

0 comments:

Post a Comment

About Me

My photo
T.keeranur, Tamilnadu,, India
back to top